செய்திகள்

வடக்கில் சிக்கிய கஞ்சாவுடன் இருவர் கைது..?

வடக்கு கடற்பிராந்தியத்தில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 113 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மாதகல் மற்றும் மானிப்பாய் பகுதிகளை சேர்ந்த இரண்டு மீனவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கேரளா கஞ்சா தொகையுடன் சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download