ஆன்மீகம்

வடமாகாணம்- இணுவில் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

சூரனை அடக்கி அருள் தந்த வேலா
உன் வீரவேல் தாங்கி எமைக் காக்க நீ வருவாய்
கொடுமனது கொண்டோரின் ஆணவத்தை அடக்கி
எங்கள் நலன் காத்தருள்வாய் இணுவிலுறை கந்தா

இணுவில் பதி கோயில் கொண்ட ஐயனே வேலா
இருள் நீக்கி ஒளியேற்ற விரைந்து நீ வருவாய்
தீயசெயல் செய்வோரின் கொடுஞ் செயலை அடக்கி
எங்கள் நலன் காத்தருள்வாய் இணுவிலுறை கந்தா

வண்ணமிகு திருக்கோயில் உள்ளுறையும் வேலா
வாழ்விற்கு வளமளிக்க விரைந்து நீ வருவாய்
வேதனைகள் செய்வோரை வேரோடு சாய்த்து
எங்கள் நலன் காத்தருள்வாய் இணுவிலுறை கந்தா

வளங் கொண்ட தமிழ் மண்ணில் வந்தமர்ந்த வேலா
வாட்டி வரும் துன்பங்களைப் போக்கிட நீ வருவாய்
வீணர்களின் வீண் செயல்கள் முற்றாக அடக்கி
எங்கள் நலன் காத்தருள்வாய் இணுவிலுறை கந்தா

திருமாலின் மருமகனாய் பெயர் பெற்ற வேலா
தீமைகளை வேரறுக்க விரைந்து நீ வருவாய்
துன்பங்கள் தொடர்வோரை துவசம் செய்து
எங்கள் நலன் காத்தருள்வாய் இணுவிலுறை கந்தா

பார்வதியின் திருமகனாய் வந்துதித்த வேலா
பாவங்கள் செய்வோரைப் புதைத்தழிக்க வருவாய்
புனிதமிகு திருவடியை பற்றித் தொழும்
எங்கள் நலன் காத்தருள்வாய் இணுவிலுறை கந்தா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்துமாமன்றம்.

Related Articles

Back to top button