ஆன்மீகம்

வடமாகாணம்- யாழ்ப்பாணம் அளவெட்டி அருள்மிகு கும்பழாவளைப் பிள்ளையார் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

குமரனுக்கு மூத்தோனே குலம் காக்கும் பிள்ளையாரே
குறைவின்றி நாம் வாழ அருள் தரவே வேணுமைய்யா
நிறை வாழ்வை எமக்களித்து நிம்மதியைத் தந்துவிட
கும்பழாவளைப் பிள்ளையாரே உடனிருக்க வந்திடைய்யா

அளவெட்டி நல்லூரில் கோயில் கொண்ட பிள்ளையாரே
அச்சமின்றி நாம் வாழ அருள் தரவே வேணுமைய்யா
நல்லறிவை எமக்களித்து நிம்மதியைத் தந்துவிட
கும்பழாவளைப் பிள்ளையாரே உடனிருக்க வந்திடைய்யா

தமிழ் ஒலிக்கும் திருநிலத்தில் இருந்தருளும் பிள்ளையாரே
தளராத மனஅமைதி அடைந்திடவே அருள் தரவே வேணுமைய்யா
கற்றுணர்ந்தோர் அன்புடனே நிம்மதியைத் தந்துவிட
கும்பழாவளைப் பிள்ளையாரே உடனிருக்க வந்திடைய்யா

வட இலங்கை கோயில் கொண்டு வரமளிக்கும் பிள்ளையாரே
வாழ்க்கை வளம் பெறவே அருள் தரவே வேணுமைய்யா
விரக்தியண்டா நிலை தந்து நிம்மதியைத் தந்துவிட
கும்பழாவளைப் பிள்ளையாரே உடனிருக்க வந்திடைய்யா

சங்கரனார் திருமகனே சங்கடங்கள் போக்கிவிடும் பிள்ளையாரே
சமரசமாய் நாம் வாழ அருள் தரவே வேணுமைய்யா
கூர்மைமிகு நல்லறிவை என்றும் எமக்களித்து நிம்மதியைத் தந்துவிட
கும்பழாவளைப் பிள்ளையாரே உடனிருக்க வந்திடைய்யா

அழகு மிகு திருக்கோயில் உள்ளுறையும் பிள்ளையாரே
ஆறுதலாய் நாம்வாழ அருள் தரவே வேணுமைய்யா
அருள் நிறைந்த பெருவாழ்வைத் தொய்யாது எமக்களித்து நிம்மதியைத் தந்துவிட
கும்பழாவளைப் பிள்ளையாரே உடனிருக்க வந்திடைய்யா.

 

Related Articles

Back to top button