ஆன்மீகம்

வடமாகாணம்- யாழ்ப்பாணம்- பொன்னாலை- அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்.

காத்து எம்மை வாழவைக்கும் கருணைமிகு பேரருளே
கவலையின்றி வாழ்வதற்கு உன்னருளை நாடுகின்றோம்
எங்கள் குரல் கேட்டு எழுந்தருள வேண்டுமைய்யா
பொன்னாலை கோயில் கொண்ட வரதராஜப் பெருமாளே

நெய்தல் நிலச் சூழலிலே நிலை கொண்ட பேரருளே
நித்தம் உன் காவல் எமைக்காக்க நாடுகின்றோம்
எங்கள் குரல் கேட்டு எழுந்தருள வேண்டுமைய்யா
பொன்னாலை கோயில் கொண்ட வரதராஜப் பெருமாளே

வடஇலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் பேரருளே
வாழ்க்கையில் நலம் பெறவே உன்பார்வை நாடுகின்றோம்
எங்கள் குரல் கேட்டு எழுந்தருள வேண்டுமைய்யா
பொன்னாலை கோயில் கொண்ட வரதராஜப் பெருமாளே

அன்னை மகாலட்சுமி உடன் உறையும் பேரருளே
அச்சமின்றி நிம்மதியாய் வாழவழி நாடுகின்றோம்
எங்கள் குரல் கேட்டு எழுந்தருள வேண்டுமைய்யா
பொன்னாலை கோயில் கொண்ட வரதராஜப் பெருமாளே

துன்பங்கள் துடைத்தெறிந்து துயர் போக்கும் பேரருளே
துணையிருந்து எமையணைக்க உன் அருளை நாடுகின்றோம்
எங்கள் குரல் கேட்டு எழுந்தருள வேண்டுமைய்யா
பொன்னாலை கோயில் கொண்ட வரதராஜப் பெருமாளே

பாற்கடலில் பள்ளி கொண்டு பாராளும் பேரருளே
பழுதில்லா நல்வாழ்வை நாம் அடைய நாடுகின்றோம்
எங்கள் குரல் கேட்டு எழுந்தருள வேண்டுமைய்யா
பொன்னாலை கோயில் கொண்ட வரதராஜப் பெருமாளே.

Related Articles

Back to top button