ஆன்மீகம்

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- சங்கரத்தை- அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

தாயாக இருந்துலகைக் காத்து வரும் தாயே
அன்புடனே அரவணைத்து ஆதரவைத் தருவாய்
துன்பங்கள் துடைத்தெறிந்து துயர் போக்க வேண்டும்
சங்கரத்தை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே காப்பாய்

மருத நிலச் சூழலிலே அமர்ந்தருளும் தாயே
மகிழ்வுநிறை நல்வாழ்வை தந்தருள வருவாய்
தீயவரைத் தடுத்து எம் துயர் போக்க வேண்டும்
சங்கரத்தை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே காப்பாய்

வீரபத்திரர் அருகு கொண்டு நலம் காக்கும் தாயே
வீரம் நிறை மனவுறுதி எமை அடையச் செய்வாய்
வீணர்களின் கொட்டத்தை அடக்கிடவே வேண்டும்
சங்கரத்தை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே காப்பாய்

புளியமரம் தலவிருட்சமாய்க் கொண்டுறையும் தாயே
புண்ணிர்கள் நலன்காத்து பெருமையுற அருள்வாய்
தீயமனம் கொண்டோரைத் துரத்திடவே வேண்டும்
சங்கரத்தை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே காப்பாய்

சிங்கத்தை வாகனமாய் உடையவளே தாயே
சீர்மைமிகு பெருவாழ்வை எமக்களித்துப் போவாய்
சீர்குலைந்த மனங்களை சீர்செய்திடவே வேண்டும்
சங்கரத்தை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே காப்பாய்

நம்பியுன்னைத் தொழுது நிற்போர் வளம் பெருக்கும் தாயே
நிம்மதியாய் நாம் வாழ உடனிருந்து ஆள்வாய்
நெறிதவறும் செயல்களெல்லாம் பொசுக்கிடவே வேண்டும்
சங்கரத்தை கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே காப்பாய்.

Related Articles

Back to top button