ஆன்மீகம்

வடமாகாணம்- வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஆதிசிவன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

வன்னிப் பெருநிலத்தில் அருள் பொழியும் சிவனே
வருங்காலம் மேன்மையுற வழியமைத்து அருள்வாய்
வரும் துன்பம் தடுத்து எம்மை வாழவைக்க வேண்டும்
தோணிக்கல் கோயில் கொண்ட ஆதிசிவபெருமானே

தொன்மைமிகு பெருமை கொண்ட திருப்பதியிலுறை சிவனே
நன்மையெங்கும் பெருகிடவே வழியமைத்து அருள்வாய்
நேர்வழியில் என்றுமெம்மை வாழவைக்க வேண்டும்
தோணிக்கல் கோயில் கொண்ட ஆதிசிவபெருமானே

அன்னை விசாலாட்சி அருகு கொண்டு அமர்ந்தருளும் சிவனே
அச்சமின்றி நிம்மதியாய் வாழ வழியமைத்து அருள்வாய்
நல்ல வழி நடத்தி வாழவைக்க வேண்டும்
தோணிக்கல் கோயில் கொண்ட ஆதிசிவபெருமானே

கேட்ட வரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் சிவனே
கௌரவமாய் இப்புவியில் வாழ வழியமைத்து அருள்வாய்
கேடுகள் அண்டாது வாழவைக்க வேண்டும்
தோணிக்கல் கோயில் கொண்ட ஆதிசிவபெருமானே

உலகாளும் பேரருளாய் இருக்கும் எங்கள் சிவனே
சித்தமெல்லாம் சீர்மைபெற வழியமைத்து அருள்வாய்
நிம்மதியாய் நிரந்தரமாய் வாழவைக்க வேண்டும்
தோணிக்கல் கோயில் கொண்ட ஆதிசிவபெருமானே

அண்டமெல்லாம் விரிந்துறையும் அற்புதனே சிவனே
அன்புநெறி உலகமெங்கும் உறுதிபெற வழியமைத்து அருள்வாய்
தலை நிமிர்ந்து இந்நாட்டில் வாழவைக்க வேண்டும்
தோணிக்கல் கோயில் கொண்ட ஆதிசிவபெருமானே.

 

Related Articles

Back to top button