ஆன்மீகம்

வடமாகாணம்- வவுனியா நகரம்- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

அருள் பொழியும் திருமுகத்தோன் எங்கள் கந்தன்
மருள் போக்கி எமக்கருள வந்தமர்ந்தான்
ஆறுதலைத் தந்தெம்மை ஆட்சி செய்வான் வவுனியாவில் கோயில் கொண்ட கந்தசுவாமி

வளம் சூழ்ந்த திருநிலத்தில் வந்துறையும் எங்கள் கந்தன்
வலுவான மனவுறுதி எமக்கருள வந்தமர்ந்தான்
வெற்றிகளை நல்கியெம்மை ஆட்சி செய்வான் வவுனியாவில் கோயில் கொண்ட கந்தசுவாமி

சிவபெருமான் திருமகனாம் எங்கள் கந்தன்
சிந்தையிலே நன்மதியை எமக்கருள வந்தமர்ந்தான்
சீர்கொண்ட பெருவாழ்வை தந்தெம்மை ஆட்சி செய்வான் வவுனியாவில் கோயில் கொண்ட கந்தசுவாமி

திருமாலின் மருமகனாய் ஆன எங்கள் கந்தன்
என்றென்றும் நன்மைகளை எமக்கருள வந்தமர்ந்தான்
தேன் தமிழை வளப்படுத்தியெம்மை ஆட்சி செய்வான் வவுனியாவில் கோயில் கொண்ட கந்தசுவாமி

கதிர்காமத் திருப்பதியில் இருந்தருளும் எங்கள் கந்தன்
காலமெல்லாம் காத்து எமக்கருள வந்தமர்ந்தான்
கலக்கமின்றி உறுதி தந்தெம்மை ஆட்சி செய்வான் வவுனியாவில் கோயில் கொண்ட கந்தசுவாமி

தெய்வானை, வள்ளியம்மை உடனுறையும் எங்கள் கந்தன்
நேர் வழியைக் காட்டி எமக்கருள வந்தமர்ந்தான்
தலை தாழா நிலை தந்தெம்மை ஆட்சி செய்வான் வவுனியாவில் கோயில் கொண்ட கந்தசுவாமி.

 

Related Articles

Back to top button