செய்திகள்மலையகம்

வட்டவலை மற்றும் பலாங்கொடை பகுதிகளில் வீதிகள் தாழிறக்கம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை நகர் பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளது.

வட்டளை பிரதான வீதியே தாழிறங்கியுள்ளமையினால், வீதியின் ஒரு மார்க்கத்தில் மாத்திரம் வாகன போக்குவரத்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்தே வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதேவேளை கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை – கிரிந்திகல பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளது.

பலாங்கொடை பகுதியில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை தொடர்ந்து இந்த வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் நடுவில் சுமார் 8 அடி நீளமாக குழியொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது.

Related Articles

Back to top button
image download