செய்திகள்

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ..

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
உறுதியானதையடுத்து அங்கு தொழில் புரிந்தவர்களிடம் பி.சி.ஆர் மற்றும்
என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்
நேற்று வெளியாகின.

இதில் மேலும் 16 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 55 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ, கினிகத்தேனை பலன்தொட, வட்டவளை, டெம்பல்ஸ்டோ ஆகிய பகுதிகளைச்
சேர்ந்தவர்களே இவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Source -tamil.truenews

Related Articles

Back to top button