அரசியல்செய்திகள்

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் அவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கான நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநரின் கடமையேற்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், யாழ் மாநகர மேயர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும், வடமாகாணத்திலுள்ள 05 மாவட்டங்களையும் சேர்ந்நத அரசாங்க அதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button