...
தொழில்நுட்பம்

வணிக துறையில் சாதகமான பயணத்தோடு APPZ MAKERS

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’… என்ற கனியன் பூங்குன்றனாரின் கனவு கவி வரிகள் நவீன தொழில்நுட்பத்தினால் நனவாகி இருக்கிறது. பூகோளமயமாதலின் விளைவாக  மின்னல் வேக ரயில்; மின்சார வேக வாழ்க்கை என உலகமே குக்கிராமமாக மாறி வருகிறது.

இன்றைய நவீன உலகம் தொழில்நுட்பம் அனைத்திலும் வெற்றி பெற்று வருகிறது. மாதா பிதா கூகுள் கடவுள் என்று மாற்றங்களால் மாற்றப்பட்டு புதுமைகளால் தீட்டப்பட்டு தொழில்நுட்பமானது  வளர்ந்து வருகிறது. அந்த வகையில் மென்பொருள் அடிப்படையிலான நிறுவனங்களுக்கான தேவைகள் அளவிட முடியாதவை. AppZ Makers (Pvt) Ltd இன் ஆரம்பப் பயணம் எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு இந்த நிறுவனம் 2012 இல் திரு.செந்தூரன் செல்வகுமாரனால் அமைக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு    ஆரம்பமான இந்த  நிறுவனப்  பயணமானது  2012 இல் மாணவர்களிடமிருந்து எழுந்த எதிர்பார்க்கப்படாத கேள்வியின் உத்வேகத்துடன் ஆரம்பமானது.

கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையே மாணவர்களின் எதிர்பாராத கேள்வியுடன், “ஐயா, நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினால், நாங்கள் பட்டப்படிப்பு முடிப்பதற்குள் உங்கள் நிறுவனத்தில் பயிற்சியாளர்களாக வேலை செய்ய முடியும்.”  என்று வினவப்பட்ட அந்த வினாவிற்கு உடனடியாக பதிலளிக்கும் முகமாக, ‘AppZ Makers ’ நிறுவனம் 2 intern களுடன்  2012 டிசம்பர் 12 அன்று ஒரு சிறிய நிறுவனமாக தொடங்கி இன்று அதன் மைல்கல்லை எட்டியுள்ளது. அந்த வரிசையில் AppzMakers இன் முதல் திட்டம் POS எனப்படும் Point of Sales software ஆகும்.

2012 ஆரம்பமான இந்த நிறுவனமானது  தொடர்ந்தும் தன்னுடைய சாதனைகளை செய்ய ஆரம்பித்தது அந்த வகையில் 2013ம் ஆண்டு தன்னுடைய வளர்ச்சிக்கான முதல் அடியை வைத்தது அந்த வகையில் AppZ Makers வலை பயன்பாட்டின் அடுத்த அத்தியாயம் 2013 இல் தொடங்கப்பட்டது. 

முதல் வலைப் பயன்பாடாக வெவ்வேறு பகுதிகளுக்கு உலக சுற்றுலா மென்பொருளை உருவாக்கும் ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் இது ஒப்படைக்கப்பட்டது. அத்தோடு இந்த நிறுவனத்தின் முதல்  முதல் திட்டமானது  POS solutions ஆகும் 2013, ஆண்டின்    தொடக்கத்தில் விற்பனைக்கு வந்தது. இந்த ஆண்டு சில இணைய பயன்பாட்டு திட்டங்களையும் இன நிறுவனம்  ஒப்பந்தம் செய்திருந்தது எனலாம் ஒரு வருடம் கடந்த பின் AppZ Makersஇன் வளர்ச்சி சீராக உயர்ந்தது 2014ம் ஆண்டு அதன் அடிப்படையில், 2014 இல் AppzMakers ஒரு தனி உரிமையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதாவது, நிறுவனர் தனது கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதோடு  நிறுவனத்தையும் நடத்தினார்.

இந்த ஆண்டுதான் அவர் POS அமைப்பின் விற்பனை மற்றும் hosting வலைத்தளத்தை பொருத்தமான சீரமைப்புடன் நிர்வகித்தார். AppZ Makers வேலை மற்றும் நிர்வாகத்தின் மிகச்சிறந்த அம்சத்தால் பல திட்டங்களைத் தொடங்கியது.2014ம் ஆண்டிலே ஆகும் மேலும் படிப்படியான முன்னேற்றம் அடைந்த  AppzMakers 2015ம் ஆண்டில்  AppZ Makers POS  விற்பனை மற்றும் வெளியிடப்பட்ட வலைத்தளத்துடன் வழங்கப்பட்ட வலைத்தளத்தையும்  நிர்வகித்தது. மேலும்,உலகளவில் முக்கிய பங்கு வகிக்கும்  வெளிநாட்டு சந்தைப்படுத்தல் முதன்முதலில் தொடங்கப்பட்டஆண்டாக 2015ம்ஆண்டு  விளங்கியது அத்தோடு  . Smart Donar என்ற mobile app   பயன்பாடு மிகவும் வெற்றிகரமாக இருந்தது.

மேலும்   இரத்த தானம் தொடர்பான சிறந்த மொபைல் பயன்பாட்டு தொடக்கமாகும்.என்று கூட சொல்லலாம் 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் AppzMakers வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அதன் அடிப்படையில், நோர்வேயை அடிப்படையாகக் கொண்ட முதல் வெளிநாட்டு திட்டம் 2016 இல் உருவாக்கப்பட்டது. இதுவும் AppzMakers நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும்.2016 இவரு அமைய 2017 ஆண்டு தொலைபேசி மீது இவர்களின் கவனம் செலுத்தப்பட்டது அதிகமாய் நடைமுறையிலுள்ள mobile application பயன்பாடுகளில்  முழுமையாக கவனம் செலுத்திய ஆண்டு 2017 ஆகும்.

இந்த வருடத்தில் திட்டங்களுக்கான   குழுவை மேம்படுத்தப்பட்டிருந்தது .  இது நிறுவனத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றம் மற்றும் வெற்றியாகவும் கருதப்படுகிறது. mobile application development  பயணம் இவ்வாறு தொடர2018ம் ஆண்டு Mobile application மற்றும் web application ஐ  அடிப்படையாகக் கொண்ட பல்வகை வெளிநாட்டு திட்டம் 2018 இல் தொடங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் Digital marketing இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 25 க்கும் மேற்பட்ட இணையதள பயன்பாடுகளை உருவாக்க 2019 சிறந்த ஆண்டாக அமைந்தது.

அதாவதுவெளிநாடு மற்றும் இலங்கையில் 25 க்கும் மேற்பட்ட இணையதள பயன்பாடுகளை உருவாக்க 2019 ஆண்டிலே தொடக்கம் சிறந்ததாக அமைந்தது எனலாம்  . இந்த ஆண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட AppzMakers இன் 7 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது மற்றும் ஒரு புதிய கிளை அலுவலகத்தைத் திறப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது.AppZMakers இன் புதிய கிளை அலுவலகம் 2020  பிப்ரவரி 26 அன்று கொள்ளுப்பிட்டியில் திறக்கப்பட்டது.இது  Hello eats மற்றும் Xeat  ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களில் கையெழுத்திடுவதற்கான முக்கிய தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்த ஆண்டு. கோவிட் 19 நிலைமை காரணமாக பொதுமக்களுக்காக பாம்ட்ரீ ஆன்லைன் சேவை தளம் உருவாக்கப்பட்ட ஆண்டும் இதுவாகும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen