செய்திகள்

வத்தளையில் அமுல்படுத்தப்பட்டுள்ள 18மணித்தியால நீர் வெட்டு.

வத்தளையின் பல பகுதிகளில் இன்று (8/2) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(10/2)
பிற்பகல் 4 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய
நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த, பள்ளியாவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ பிரதான வீதி, எலகந்த
மற்றும் ஹெந்தல வீதிப் பகுதிகளில் இந்த காலப்பகுதியில் நீர்வெட்டு
அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹேகித்த வீதியில் புதிதாக அமைக்கப்படும் நீர் விநியோகக் கட்டமைப்பின்
திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com