செய்திகள்

வத்தளையில் 128 பேருக்கு கொரோனா : இந்தியர்களும் உள்ளடக்கம்

வத்தளை – ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலை கொரோனா தொற்று அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த இரும்பு உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 194 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் 128 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் மக்கள் சுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலையில் அதிகமாக இந்தியப் பிரஜைகளே பணியாற்றி வரும் நிலையில் தொற்று உறுதியானவர்களில் சுமார் 92 இந்தியர்கள் அடங்குகின்றனர். தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லவும் ஏனையவர்களை தொழிற்சாலைக்கு உள்ளேயே தனிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இரும்பு கைத்​தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டவர்கள் கிசிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர், அந்த கைத்தொழிற்சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பிரபல்யம் வாய்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனமாக, இந்த தொழிற்சாலை கடந்த பல வருடங்களாக, வத்தளை-ஹேகித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button