...
செய்திகள்

வத்தளை -ப்ரீத்திபுர கடலில் காணாமல் போன இரு சிறுவர்களும் இன்று சடலமாக மீட்பு

வத்தளை -ப்ரீத்திபுர கடலில் நீராட சென்று காணாமல் போன இரு பாடசாலை மாணவர்களின் சடலங்களும் இன்று காலை( 13) கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வத்தளை ப்ரீத்திபுர கடற்கருக்கு நேற்று மாலை பாடசாலை மாணவர்கள் 4 பேர் சென்றிருந்த நிலையில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மாணவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகளும் பிரதேச வாசிகளும் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர்.

வத்தளை என்டேரமுள்ள பகுதியை சேர்ந்த கே கே ருவிந்த புன்சர (15)மற்றும் எம் சஞ்சித சந்தகெலும் (15)ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen