சினிமாசெய்திகள்

வந்தது ‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்ட்டர் ; அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வடிவில் இன்று மாலை வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு படத்தின் தலைப்பாக ‘வலிமை’ அறிவிக்கப்பட்டதற்கு பின், இப்படம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை. வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள், ஒரு வருடத்துக்கு மேலாக காத்திருந்தனர்.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மோஷன் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Back to top button