செய்திகள்

வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கும் காணிகள் தொடர்பான பிரச்சினைக்கு ஓரிரு மாதங்களில் தீர்வு

வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத்
தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் வனவளபாதுகாப்புத்
திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கும் காணிகள் தொடர்பான பிரச்சினைக்கு
ஓரிரு மாதங்களில் தீர்வு முன்வைக்கப்படும்என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இவ்விடயம் பற்றி துறைசார் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும்
அவர் கூறினார்.

சேதனப் பசளை உற்பத்தி வேலைத்திட்டத்தில் நிலவும் குறைபாடுகள் விரைவில்
தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மக்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் மிக விரைவில் கிடைக்கு.அத்துடன்

வடக்கில் புரவிப்புயலில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி அமைச்சரவை
பத்திரம் ஒன்று சமர்ப்பித்திருக்கின்றோம். எதிர்வரும் அமைச்சரவைக்கூட்டத்தில்
அதன் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்

மேலும் மக்கள்நலன் கருதியே இரசாயன பசளைக்கு பதிலாக சேதன பசளைகளை
உற்பத்திசெய்யும் திட்டத்தினை அரசாங்கம் செயற்படுத்தியது. எதிர்வரும்
வருடத்தில் இருந்தே அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னெடுப்பதில் உள்ள குறைபாடுகள் எல்லாம்
விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

Related Articles

Back to top button