செய்திகள்

வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதுடன் அவர் பொத்துவில் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பொத்துவில் களப்புகட்டு விச்சு நகரைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com