...
செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த டயகம,நு/ சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி

கடத்த வருடம் (2020) நடைபெற்ற க. பொ. த. (சா.த) பரீட்சையில் டயகம, சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 89 மாணவர்களில் 73 மாணவர்கள் (கணித பாடத்துடன்) தேர்ச்சி பெற்றுள்ளனர்! சாராரியாக இது 82 வீதமாக அமைந்துள்ளது!

.( 2019ல் தேர்ச்சி வீதம் 54 ஆக அமைந்திருந்தது, அதேவேளை 2020ல் சுமார் 28 வீதம் அதிகரித்து 82 வீதமாக உயர்ந்து மிகப்பெரிய வரலாற்று சாதனையை சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி நிகழ்த்தியுள்ளது! )

குறிப்பாக கணித பாடத்தில மொத்தமாக 7A, 6B, 44C, 22S.. எனும் பெறுபேறுகள் பெற்று 89 வீதம் எனும் சராசரி பாடசாலை வரலாற்றில் வரலாற்று சாதனையாக அது அமைகிறது. இது முன்னெப்போதுமே நிதழாத ஒன்று. 2019ல் கணித பாடத்தில் 43 வீதமாக இருந்த சராசரி 2020ல் 46 வீதமாக அதிகரித்து சாதனை புரிந்துள்ளது.

அதேவேளை விஞ்ஞானபாடத்தில் 5A, 4B, 24C, 51S எனும் பெறுபேற்றை பெற்று 94 வீதம் எனும் சராசரியை பெற்று வரலாற்று சாதனையை புரிந்துள்ளது! 2019ல் விஞ்ஞான பாடத்தில் 31 வீதமாக இருந்த சராசரி 63 வீதமாக 2020ல் அதிகரித்து வரலாற்று சாதனையாக மாறியிருக்கிறது!

வரலாறு பாடத்தில் 8A,5B,39C,24S எனும் பெறுபேற்றை பெற்று வரலாற்று சாதனை புரியப்பட்டுள்ளது! 2019ல் வரலாறு பாடத்தில் 77 வீதமாக இருந்த சராசரி 85 வீதமாக 2020ல் அதிகரித்துள்ளது.

தமிழ் பாடத்தில் 12A, 21B, 32C, 23S எனும் பெறுபேற்றை பெற்று 99 வீதமாக சராசரி உயர்ந்துள்ளது.2019ல் 92 வீதமாக இருந்த சராசரி 2020ல் 8 வீதமாக அதிகரித்துள்ளது!

புவியியல் பாடத்தில் 6A, 17B, 14C, 16S எனும் பெறுபேற்றை பெற்று 96 வீதமாக சராசரி உயர்ந்துள்ளது. 2019ல் 87 வீதமாக இருந்த சராசரி 9 வீதமாக அதிகரித்துள்ளது!


குடியியல் கல்வி பாடத்திட்டத்தில் 4A, 7B, 9C, 5S எனும் பெறுபேற்றை பெற்று 93 வீதமாக சராசரி உயர்ந்துள்ளது. 2019ல் 86 வீதமாக இருந்த சராசரி 7 வீதமாக அதிகரித்துள்ளது!


ஆங்கில பாடத்தில் 1B, 9C, 31S எனும் பெறுபேற்றை பெற்று 46 வீதமா சராசரி உயர்ந்துள்ளது. 2019ல் 19 வீதமாக இருந்த சராசரி 27 வீதமாக அதிகரித்துள்ளது!

தமிழ் இலக்கிய நயம் பாடத்தில் 25A, 15B, 25C, 14S எனும் பெறுபேற்றை பெற்று 99 வீதமாக உயர்ந்துள்ளது. 2019ல் 87 வீதமாக இருந்த சராசரி 12 வீதமாக அதிகரித்துள்ளது!

சைவநெறி பாடத்தில் 8A, 16B, 29C, 22S எனும் பெறுபேற்றை பெற்று 88 வீதமாக சராசரி உயர்ந்துள்ளது. 2019ல் 84 வீதமாக இருந்த சராசரி 5 வீதமாக உயர்ந்துள்ளது.

கிருஸ்தவ பாடத்தில் 1A, 3C, 1S எனும் பெறுபேற்றை பெற்று 100 வீதமாக சராசரி அமைகிறது. 2019ல் 100 வீதமாக இருந்த சராசரி 2020லும் அதே 100 வீதத்தை தக்க வைத்துள்ளது!

சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்தில் 6A, 10B, 17C, 12S எனும் பெறுபேற்றை பெற்று 98 வீதமாக சராசரி உயர்ந்துள்ளது. 2019ல் 90 வீதமாக இருந்த சராசரி 8 வீதமாக உயர்ந்துள்ளது!

மனையியல் பாடத்தில் 3B, 16C, 20S எனும் பெறுபேற்றை பெற்று 91 வீதமாக சராசரி உயர்ந்துள்ளது.2019ல் 73 வீதமாக இருந்த சராசரி 18 வீதமாக உயர்ந்துள்ளது!

Related Articles

Back to top button


Thubinail image
Screen