...
விளையாட்டு

வராக்கப்பொளை பெனிஹல பிரிமியம் லீக் போட்டியில் பெனிஹெல லயன்ஸ் வெற்றி

இரத்தினபுரி உதவும்கரங்கள் அமைப்பின் அனுசரனையில் கேகாலை விழித்தெழு
அறக்கட்டளை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 10வது தடவையாக இடம்பெற்ற அணிக்கு 11,பேர்
கொண்ட
வராக்கப்பொளை பெனிஹல பிரிமியம் லீக் -2021 (PPL) கிரிக்கட் சுற்றுப் போட்டி
(04/11/2921) தீபாவளி தினத் தன்று இடம் பெற்றது.

பெனிஹெல LION ,பெனிஹெல TIGERS ,பெனிஹெல WORRIENTS ஆகிய மூன்று அணிகள் மோதின.

போட்டியில் LIONS மற்றும் WORRIENTS அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில்
கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் பெனிஹெல LION அணியினர் தனதாக்கி கொண்டதோடு
தொடர் ஆட்டநாயகனாக அருணும்,ஆட்டநாயகனாக ஹசான் மற்றும் சிறந்த
பந்துவீச்சாளாராக லசித்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் கேகாலை மாவட்ட
அமைப்பாளர் ஆர்,அமுதன் மற்றும் இளைஞர் அணியின் வர்த்தக இணைப்பாளர்
த.தேவக்குமார்.நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் வீ,பத்தமசிரி ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர். போட்டிக்கு பாலகிருஷ்னன்,
கமலனி குடும்பத்தினர் அனுசரணையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen