செய்திகள்

வருடத்தின் இதுவரையான டெங்குவால் இதுவரையில் 70 பேர் உயிரிழப்பு – மேல்மாகாணத்தில் விசேட திட்டம்.

கொழும்பு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழுக்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பபட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையால், வீடுகளின் கூரைகள், உள்ளிட்ட பகுதிகளில் நுளம்பு குடம்பிகள் பெருகும் சாத்தியமுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button