செய்திகள்

வருடத்தின் முதலாம் நாளே தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்காக கை கோர்த்த 15கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள்..

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளுக்காக கொழும்பில் பல சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்தது நேற்று (01/01/2019)ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தின.

குறித்த சந்திப்பு கொழும்பு 03இல் அமைந்துள்ள இலங்கை தொழிநுட்ப வர்த்தக மற்றும் தேசிய தொழிலாளர் சங்க கேட்போர் கூடத்தில் மதியம் 01மணிக்கு ஆரம்பமானது.

கடந்த 2018 இறுதி மூன்று மாதங்களில் இலங்கை அரசியலில் பல குழப்பங்கள் நீடித்திருந்தாலும், தோட்ட தொழிலாளர்கள் தங்களது அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தனர். மேலும் அவர்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாக மலையக வாழ் இளைஞர்கள் கொழும்பிலும் பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் .

அதிகமாக பெரும்பான்மை சமூகத்தை பிரதிநித்துவ படுத்தும் 15கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் ,தொழிற் சங்கங்கள் ஒன்றிணைத்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிட்ட வேண்டும் என்பதற்காக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். .அதற்கான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பே நேற்றைய தினம் இடம் பெற்றது.

குறிப்பாக
மலையக சமூகம் ஆய்வு மையம்,
இலங்கை தொழிநுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம் ,
இலங்கை வாங்கி சேவை சங்கம் ,
ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ,
இலங்கை தோட்ட சேவை சங்கம் ,
தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் ,
தொழிலாளர் போராட்டத்துக்கான மத்திய நிலையம் ,
தம்பால் மற்றும் தொலை தொடர்பு சங்கம் ,
உள்நாட்டு பல்கலை கழக மாணவர்களின் கட்டமைப்பு ,
வமே கடே அமைப்பு ,
மொன்லார் நிறுவனம்,
ப்ரக்சிஸ் நிறுவனம் ,
ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் ,
புதிய தலை முறை ,
காப்புறுதி சங்கம் ,
அரச அச்சக கலைஞர்களின் சங்கம் ,
தபால் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் சங்கம்,
கிருஸ்த்துவர்களின் அமைப்பு போன்ற இன்னும் பல சிவில் மற்றும் தொழிற்சங்கங்கள் தோட்ட தொழிலாள ர்களுக்காக கை கோர்க்கின்றனர்.

இது தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனையை ஏனைய சமூகங்கள் முதல் முறையாக கையில் எடுக்கும் சந்தர்ப்பமாக குறிப்பிடலாம்.மேலும் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பதாக மேலும் குறித்த ஊடக வியலாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button