...
செய்திகள்பதுளைமலையகம்

வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் வழங்கி வைப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு அமையப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு பயிற்சி அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் (ஜனவரி 04ஆம் திகதி) பதுளை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

ஊவா மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களுக்குப் பயிற்சி அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சுமார் 2500 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள அதேவேளை, முதற்கட்டமாக பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1002 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதற்கமைய மாகாண நிறுவனங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட குறித்த பட்டதாரிகள் அனைவரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி விஜித மல்லேஹேவா, பிரதி பிரதான செயலாளர் ( பணியாளர்கள் மற்றும் பயிற்சி) எம்.எம். நந்தசேன, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen