காலநிலைசெய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.!

பேருவளையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புக்களில் தற்போது காணப்படும் மேக மூட்டங்கள் காரணமாக பலத்த மழை மற்றும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த காலநிலை இன்று இரவு 10.30 மணிவரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்.

இந்தப்பகுதிகளில் கடலும் திடீரென கொந்தளிப்புடன் காணப்படும். இதன்காரணமாக மீனவ மற்றும் கடற்சார் சமூகம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத் தப்படுகின்றார்கள்.

Related Articles

Back to top button