உலகம்
வள்ளுவன் வாக்கை துணியில் நெய்துவரும் நெசவாளர்!
இந்திய, தமிழ் நாடு கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான சின்னசாமி என்பவர் புதிய முயற்சியாக, 1330 திருக்குறள்களையும் துணியில் நெய்து வருகிறார். முதல் இரண்டு அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள்களை துணியில் நெய்துள்ள இவர், 3வது அதிகாரத்தின் குறள்களை நெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
1330 குறள்களை நெய்த பிறகு, அதை அரசே காட்சிப்படுத்த வேண்டும் என சின்னசாமி கோரிக்கை விடுத்துள்ளார். திருக்குறள் மட்டுமில்லாமல் தமிழக அரசின் இலட்சினை, மகாத்மா காந்தி உருவங்களையும் சின்னாமி துணியில் நெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.