செய்திகள்

வழமைக்கு திரும்பிய சமூகவலைத்தளங்கள்

பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற  சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக சமூக வலைத்தளங்கள்முடக்கப்பட்டிருந்தது.

இன்று நன்பகலுடன் இத்தடை நீக்கப்பட்டுள்ளது,

எனினும் நாட்டில் அமைதியை பேணுவதட்கு மக்கள் சமூக வலைத்தளங்களை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் எனவும் பயனாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com