செய்திகள்

வவுனியாவில் உருவான மரணச்சடங்கு கொத்தணி.

வவுனியா ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர் அதிகார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி ஒலுமடு பட்டேபிரிந்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30 பேரில் 28 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த மரணச் சடங்கு இடம்பெற்ற வீட்டில் இருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டமை யால் வவுனியா புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்த போது குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் குறித்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்ட 30 பேருக்குத் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 28 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையா ளம் கண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அவர் களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர் அதிகார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button