செய்திகள்

வவுனியாவில் சட்டவிரோத அகல்வில் ஈடுபட்டவர் அதிரடி கைது.

வவுனியா புளியங்குளம் – நயினாமடு வனப்பகுதியில் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது மேலும் சிலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

புதையல் தோண்டும் நோக்கில் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அகழ்விற்கு பயன்படுத்தப்பட் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா நெடுங்கேணி பகுதியை சேர்ந்த 28 தொடக்கம் 54 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை வவுனியா நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளியங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related Articles

Back to top button