செய்திகள்

வவுனியாவில் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவனின் வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள குளம் ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் மாணவனின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது,

யாழ் . பல்கலைக்கழக மாணவரான பாலசுப்ரமணியம் தர்மிலன் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்தார்.

மாணவனின் பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தூர்வாரப்பட்ட குளத்தில் மாணவன் தவறி வீழ்ந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button