செய்திகள்

வவுனியாவில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

வவுனியா ஆண்டியாப்புளியங்குளம் பகுதியில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 203 கிலோகிராம் கேரள கஞ்சா மீற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார்  மதவாச்சி வீதியில் லொறியொன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பளை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button