செய்திகள்

வவுனியா- அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்..

வன்னிப் பெருநிலத்தில் வவுனியா மாநகரில் 
வளம் பெற்று நிலை கொண்ட விநாயகப் பெருமானே
சிந்தனை தெளிவு பெற்று சீரான வாழ்வுபெற
வேண்டுகின்றோம் உன்னருளை சிந்தாமணி விநாயகரே
வன்னித் தமிழரசர் ஆண்ட இப்பூமியிலே
வழிகாட்ட கோயில் கொண்ட விநாயகப் பெருமானே
வாட்டமில்லா வாழ்வுபெற்று நம்வாழ்வு உயர்வுபெற
வணங்குகின்றோம் உன்பாதம் சிந்தாமணி விநாயகரே
தந்தை தாய் பெரியரென்ற தத்துவத்தை வெளிப்படுத்தி
உறவுநிலை பெருமையினை உலகிற்கு உணர்த்திட்ட விநாயகப் பெருமானே
எதிர்காலம் எமதென்ற உறுதிநிலை நாம்பெறவே
தொழுகின்றோம் உன்னடியை சிந்தாமணி விநாயகரே
விளைநிலமும், நீர்நிலையும் சூழ்ந்த வளமண்தனிலே
நிலைபெற்று வளமளிக்கும் விநாயகப் பெருமானே
வளமாக நம் தமிழர் வாழ்வை உறுதிசெய்ய
நம்பிக்கை கொண்டுள்ளோம் சிந்தாமணி விநாயகரே
சஞ்சலங்கள் களைந்து நலம் வழங்கி வாழ்வளிக்கும்
பெருங்கருணை கொண்டவரே விநாயகப் பெருமானே
அச்சமின்றி நிம்மதியாய் நாம் என்றும் வாழ்ந்திடவே
உன்காப்பை நாடுகின்றோம் சிந்தாமணி விநாயகரே
மகிழ்வு நிறை வாழ்வுதர மனங்கொள்ளும்
மாமணியே எங்கள் மனம் நிறைந்த விநாயகரே
போட்டி பொறாமைகள் வஞ்சனைகள் அற்றநிலை உறுதிபெற
அருகிருந்து அருளிடய்யா  சிந்தாமணி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
image download