...
செய்திகள்

வவுனியா- கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு திருக்கோயில் 

வவுனியா தமிழ் நகரில் கோயில் கொண்ட பெருமாளே
எம்வாழ்வுக் குறுதுணையாயிருந் தெமக்கு அருள்வாயே
தலை நிமிர்ந்து வளம் பெற்று நாம் வாழப் பெருமாளே
உன் கருணையெமக் கருளி வழிகாட்டியெமக்கு அருள்வாயே
வளங்கொண்ட நன்னகரில் இருந்தருளும் பெருமாளே
தளராத மனத்தினராய் நாம் வாழ அருள்வாயே 
வெற்றி கொண்டு வாழும் நிலை தந்தருள்வாய் பெருமாளே
கொடுமனது கொண்டவர் தம் கொட்டத்தை அடக்கியெமக்கு அருள்வாயே 
கோவில் குளத்தினிலே இருந்தருளும் பெருமாளே
கேடில்லா நல்வாழ்வை நாமடைய அருள்வாயே 
தொல்லையின்றி வாழவேண்டும் தூயவனே பெருமாளே
தளர்வில்லா நிம்மதியைத் தந்தெமக்கு அருள்வாயே 
ஸ்ரீதேவி, பூதேவி அன்னையருடன் வீற்றிருக்கும் பெருமாளே
சீராக வாழ்வதற்கு என்றுமெமக்கு அருள்வாயே 
வாழ்வுரிமை தடுப்போரை வதைக்க வேண்டும் பெருமாளே
வாழ்க்கையை மகிழ்வுடனே வாழ எமக்கு அருள்வாயே 
சங்கு, சக்கரம் தாங்கிநிற்கும் திருமாலே பெருமாளே
எங்கும் நிம்மதி நிறைந்துவிட கருணை செய்து அருள்வாயே 
பங்கமில்லா நிம்மதியை அருள வேண்டும் பெருமாளே
ஏங்கித்தவிக்கும் நிலையகற்றி மனவுறுதி தந்தெமக்கு அருள்வாயே 
வளங்கொண்ட பெருங் கோயில் உடையவரே பெருமாளே
வன்னிப் பெருநிலத்தில் தமிழ் நிலைக்க அருள்வாயே 
உன்னடியைச் சரணடைந்தோம் காத்தருள்வாய் பெருமாளே 
மின்னலொளி போலவே வந்து அணைத்தெமக்கு அருள்வாயே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.111

Related Articles

Back to top button


Thubinail image
Screen