செய்திகள்

வவுனியா- கோவில்குளம்- அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோயில்.. 

வவுனியா தமிழ்நிலத்தில் கோயில் கொண்ட பெருமானே
வரமளித்து, வளமளித்து நலம் பெருக்க வேண்டுமய்யா
வற்றாத உன்கருணை நித்தமும் நாமடைய
அருள்தருவாய் அகிலாண்டேஸ்வரப் பெருமானே.. 
அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் உறையும் பெருமானே
மகிழ்வுடனே நாம்வாழ வழிசெய்ய வேண்டுமய்யா
தளர்வில்லா மகிழ்வு கொண்டு நாம் என்றும் வாழ்ந்திடவே
அருகிருந்து உறுதிசெய்வாய் அகிலாண்டேஸ்வரப் பெருமானே.. 
வேதத்தின் மூலவனாய் விளங்குகின்ற பெருமானே
வேதனைகள் நெருங்காத நிலையெமக்கு வேண்டுமய்யா
சீர்மையுடன் சிறப்பும் பெற்று வளமாக வாழ்ந்திடவே
அருகிருந்து காத்திடுவாய் அகிலாண்டேஸ்வரப் பெருமானே.. 
முத்தமிழின் நாதமாய் விளங்குகின்ற பெருமானே
உலகமெல்லாம் தமிழர் நலம் காத்திடவே வேண்டுமய்யா
வாழ்வுரிமை முழுமையுடன் பெற்று நாம் வாழ்ந்திடவே
உற்று துணையிருப்பாய் அகிலாண்டேஸ்வரப் பெருமானே.. 
வன்னி மாநிலத்திருந்து வழிகாட்டும் பெருமானே
வளமான வாழ்வுக்கு வகைசெய்ய வேண்டுமய்யா
வந்ததுயர் துடைத்தெறிந்து வரும் துயர்கள் தடுத்திடவே
திடமாக இருந்தெமக்கு துணையிருப்பாய் அகிலாண்டேஸ்வரப் பெருமானே.. 
நம்பியுன்னைத் தொழுவோர் நலங்காக்கும் பெருமானே
தலைதாழா வாழ்வெமக்கு தப்பாமல் வேண்டுமய்யா
நம்மினமும், தமிழ்மொழியும் உறுதியுடன் இருந்திடவே
நம்பிக்கை தந்தெம்மை உறுதிசெய்வாய் அகிலாண்டேஸ்வரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button