...
செய்திகள்

வவுனியா- செட்டிக்குளம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

 
வினையகற்றி நலம் சேர்க்கும் விநாயகப் பெருமானே 
உன் கருணை வேண்டுமைய்யா எமையாளும் நாயகனே
வந்த துன்பம் போக்கி விட வரும் துன்பம் தடுத்துவிட
நீயே துணையிருந்து எமக்கருள வேண்டுமைய்யா 
நோய் நொடிகள் இன்றி எம்மை வாழச் செய்வாய் பெருமானே 
துன்பம் தரும் கொடுநோய்கள் அண்டாது தடுத்து விட்டு
சுகங்கள் கொண்டு நாம் வாழ ஆசியை நீ தரவேண்டும் 
ஐங்கரனே சிவன் மகனே எமக்கருள வேண்டுமைய்யா 
வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளமமர்ந்த பெருமானே 
வளங்கொண்ட தமிழ் மண்ணை மலர்ச்சியுறச் செய்திடைய்யா
செட்டிக்குள மக்கள் என்றும் செழிப்புடனே வாழ்வதற்கு 
சீரான வழிகாட்டி எமக்கருள வேண்டுமைய்யா 
நம்பியடிபற்றின் நலமளிக்கும் பெருமானே 
நாமென்றும் நலமுடனும் சுகமுடனும் வாழ்வதற்கு வழியை நீ செய்திடைய்யா
உடனிருந்து அறிவுடனே நாம் நடக்க 
ஏற்ற வழி காட்டி எமக்கருள வேண்டுமைய்யா 
வயல் சூழ்ந்த பெருநிலத்தில் கோயில் கொண்ட பெருமானே 
வளம் கொழிக்கும் உன்மண்ணில் தமிழ் மொழியைக் காத்திடைய்யா
மகிழ்ச்சியுடன் உன்னடியார் சீர்பெற்று வாழ்வதற்கு 
என்றுமுடனிருந்து எமக்கருள வேண்டுமைய்யா 
எங்கும் நிறைந்திருந்து கருணை செய்யும் பெருமானே 
சித்தி விநாயகரென்று உன்னைக் கூவி அழைக்கையிலே
வந்தெம்மை அணைத்தருளி ஆறுதல் தருவதற்கு 
தயங்காது வந்து வரமளிக்க வேண்டுமைய்யா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen