...
செய்திகள்

வவுனியா நகர்- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் 

சரவணப் பொய்கையிலே உதித்தெழுந்த கந்தா
உன்வீரவேல் எமைக்காக்கும் என்றுமே ஐயா
ஆறுதிருமுகங்கள் கொண்டு அருள் வழங்கும் கந்தா
ஆற்றலுடன் நாம் திகழ அருளிடுவாய் ஐயா
வவுனியா நகரினிலே கோயில் கொண்ட கந்தா
வலிமைபெற்று நாம் வாழ வழிவகுப்பாய் ஐயா 
தெய்வானை திருமகளை மணந்தவனே கந்தா
தீயவர்கள் கொடுமையினை அடக்கிடுவாய் ஐயா
வளங் கொண்ட நன்நகரில் வீற்றிருக்கும் கந்தா
நலம் மிகுந்த வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா 
கொடியவர்கள் நிலைகுலையச் செய்திடுவாய் கந்தா
கேட்டவரம் கொடுத்திடவே வந்திடுவாய் ஐயா
வட இலங்கை எல்லை நகர் காவல் செய்யும் கந்தா
வந்ததுன்பம் போக்கிடுவாய், வருந்துன்பம் தடுத்திடுவாய் ஐயா 
நிம்மதியாய் நாம் வாழ உறுதி செய்வாய் கந்தா
நிரந்தரமாய் அது நிலைக்க வழிதிறப்பாய் ஐயா
தமிழ் மொழியின் காவலனாய்த் திகழுகின்ற கந்தா
தரணியிலே தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்பாய் ஐயா
வள்ளியம்மையுடனுறையும் திருமகனே கந்தா
வழுவில்லா உயர்வாழ்வை வகுத்திடுவாய் ஐயா
சரவணனே, சண்முகனே சரணம் நீ கந்தா
இந்நாட்டில் நிம்மதியாய் நாம் வாழ வழிதருவாய் ஐயா
தமிழுணர்வைத் தரணிக்கு வெளிப்படுத்து கந்தா
தரணியெங்கும் நல்லமைதி உறுதி செய்வாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen