...
செய்திகள்

வவுனியா- நெடுங்கேணி- வெடுக்குநாறி மலை அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்

 
வவுனியா பெருநிலத்தில் கோயில் கொண்ட சிவனே
வரலாற்றில் உன்பெருமை உலகறியச் செய்வாய்
அன்பு கொண்டோர் உள்ளங்களில் உறைகின்ற சிவனே
ஆட்சி கொண்டு எங்களுக்கு மீட்சியை நீ தருவாய் 
வளம் நிறைந்த தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் சிவனே
வலிந்து வரும் துன்பங்களை அழித்தெம்மைக் காப்பாய்
உன் பழைமை அறியாத அறிவிலிகள் சிவனே
பழம் பெருமை மறைத்திடவே முனையும் நிலை நீ தடுப்பாய்
வெடுக்குநாறி மலையுச்சி இருந்துறையும் சிவனே
நாற்புறமும் அருள் பொழிந்து எங்களை நீ காப்பாய்
பார்வதியின் அருளுடனே நலமளிக்கும் சிவனே 
உன்னடியைச் சரணடையும் எங்களை நீ காப்பாய்
ஆதிலிங்கேஸ்வரர் என்ற நாமம் கொண்ட சிவனே
பல்லாயிரமாண்டு பழைமை கொண்ட வரலாற்றை உறுதி செய்து அருள்வாய்
தமிழ் மொழியின் பெருமையினை உணர்த்த வேண்டும் சிவனே 
தயங்காது உடன் வந்து ஆவன நீ செய்வாய் 
இத்தீவை சிவபூமி என்றன்று பகர்ந்தார் திருமூலர் சிவனே 
அக்கூற்றை உறுதி செய்ய விரைந்து நீ வருவாய் 
விரைவாக பூமாதேவி சிவலிங்கங்களை வெளிப்படுத்த அருள் வேண்டும் சிவனே 
எட்டுத்திக்கும் அதுகண்டு வியக்க நீ செய்வாய்
ஆதிசிவன் மலைமீதிருந்து அருள் பொழியும் சிவனே
அச்சமின்றி உன்பாதம் தொழும் உரிமை தருவாய்
தீயபகை, கொடுமனது கொண்டவர்கள் சிவனே
வலுவிழந்து, தலைதாழும் நிலையை நீ செய்வாய்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Sent from my Huawei phone

Related Articles

Back to top button


Thubinail image
Screen