செய்திகள்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.​ யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்றைய தினம் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

Related Articles

Back to top button