செய்திகள்

வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை ஹெந்தல பகுதியை சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்த 42 வயதான ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மாடுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிளொன்றே இன்று அதிகாலை 12.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புளியங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download