செய்திகள்

வவுனியா- மயங்கி விழுந்தவர் மரணம்..

வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (27) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் வசிக்கும் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே அவர் மணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு கொவிட் தொற்று உள்ளதா என பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download