...
செய்திகள்

வவுனியா- முருகனூர் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் …

வவுனியா வளநிலத்தில் வளமளிக்க வந்தவரே
வளம் பெற்று நாம் வாழ அருள் வழங்க வேண்டுமப்பா
கேட்ட வரம் தந்தருளும் குஞ்சர முகத்தோனே
ஏற்ற நலம் தந்தெம்மை வாழவைக்க வேண்டுமப்பா
எழில் சூழ்ந்த முருகனூர் அமர்ந்தருள வந்தவரே
உடனிருந்து எங்களுக்குக் காப்பளிக்க வேண்டுமப்பா
நாடி வந்தோம் உன்துணையைச் சிவனாரின் திருமகனே
அவலமில்லா நல்வாழ்வை எமக்களிக்க வேண்டுமப்பா
தமிழ் மணக்கும் திருமண்ணில் வீற்றிருக்க வந்தவரே
தவறின்றி நாம் வாழ உகந்தவழி வேண்டுமப்பா
தேடிவந்து அருள் பொழியும் வேலவனின் மூத்தவனே
தெளிவான மனநிலையை எமக்களிக்க வேண்டுமப்பா
குறைகள் பொறுத் தெமக்கு நலம் வழங்க வந்தவரே
குற்றமில்லா உயர் வாழ்வை எமக்களிக்க வேண்டுமப்பா
நல்லறிவு புகட்டி நம்மை ஆட்கொள்ளும் நாயகனே
நேர்மை கொண்டு நாம் வாழ அறிவுதர வேண்டுமப்பா
 தந்தை தாய் பெரியரென்று அறிவுறுத்த வந்தவரே
தரணியிலே நம்வாழ்வு மேன்மையுற வேண்டுமப்பா
உறுதிதர வீற்றிருக்கும் உத்தமனே, திருமகனே
ஒழுக்கமிகு நல்லறிவு எமக்களிக்கவேண்டுமப்பா
சாணத்திலும், மஞ்சளிலும் இருந்தருள வந்தவரே
சத்தியத்தை நிலை நிறுத்த உதவிடவே வேண்டுமப்பா
சீரான வாழ்வுக்கு வழியமைக்கும் சித்தி விநாயகரே
சோர்வின்றி முன் செல்ல உன் திருவருளே வேண்டுமப்பா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen