செய்திகள்

வவுனியா-வன்னிகோட்டம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் பலி?

வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸூடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதான மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஆசிக்குளம் பகுதியைச் சேர்ந்த இம்முறை சாதாரண தர பரீட்சையில் தோற்றும் புண்ணியகுமார் பகிரதன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Back to top button