செய்திகள்

வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை!

பயணக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளைய தினம்(25), எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக வெளியே செல்ல முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு, வெளியே செல்லும் எந்தவொரு நபருக்கும் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே அதுவும் நடந்து செல்லும் தூரத்திலுள்ள கடைக்கு செல்ல வேண்டும். அத்துடன், அடையாள அட்டை இலக்க முறைமை நாளைய தினம் செல்லுபடியாகாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download