...
செய்திகள்

வாகன இறக்குமதி-இன்று வெளியான புதிய தகவல்

அந்நிய செலாவணி நாட்டிற்குள் வர ஆரம்பித்ததை அடுத்தே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாகனங்கள் மற்றும் டயில் தவிர்ந்த ஏனைய அனைத்து அத்தியாவசியமற்ற பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனூடாக பாரியளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியில் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை மீண்டும் வழமை போன்று வருகைத் தர ஆரம்பித்ததை அடுத்தே, அந்நிய செலாவணி நாட்டிற்குள் மீள வர ஆரம்பிக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறினார்.

அத்துடன், சுற்றுலாத்துறையை போன்ற துறைகளின் முன்னேற்றத்தின் ஊடாக எதிர்வரும் நாட்களில் ஏற்படுகின்ற ஸ்திரதன்மையினாலேயே வாகன இறக்குமதிக்கு மீள அனுமதி வழங்க முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen