செய்திகள்

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்.!

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவதை தவிர்ந்துக் கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு வாகனங்களை அந்தப் பாதையில் செலுத்துவது சட்டவிரோத செயற்பாடாகும் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல் வி டி எஸ் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த பணிப்பாளர் நாயகம், பாதையின் நிர்மாணப் பணி காரணமாக அங்கு அடிக்கடி கனரக வாகனங்கள் செல்வதினால் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button