...
செய்திகள்

வாகரைப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 51 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் மரணவீட்டில் கலந்து கொண்டவர்கள் 26பேர் உட்பட 51 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வை.விவேக் தெரிவித்தார்.

பால்ச்சேனையில் கட்டுப்பாடுகளை மீறி மரணவீட்டில் கலந்து கொண்டவர்களில் 33 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 26 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று தட்டுமுனை கதிரவெளி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 12 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் மக்களின் அசமந்தப்போக்கே இதற்குக்காரணம் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen