செய்திகள்

வாக்களிப்பதற்கு மேலும் ஒரு மணித்தியாலம் – வர்த்தமானி இன்றிரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 07 மணித் தொடக்கம் மாலை 05 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இம்முறை வாக்குச் சீட்டின் நீளம் அதிகரித்துள்ளதால் , வாக்காளர் வாக்களிப்பதற்கு மேலதிக நேரம் தேவைப்படலாம் என அனுமானத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் தேர்தல்களில் காலை ஏழு மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை வாக்களிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
image download