கல்விசெய்திகள்நுவரெலியாமலையகம்

வாசிகசாலை தொடர்பில் கொட்டக்கலை பிரதேச சபை மறந்து விட்டதா?

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை பகுதியில் கொட்டக்கலை பிரதேச சபையால் ஒரு வருடத்திற்கு முன்பு 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வாசிகசாலை ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் குறித்த வாசிகசாலையை இன்று வரையில் மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் குறித்த வாசிகசாலையை புனரமைத்தவுடன் சமூக விரோதிகள் சிலரால் கண்ணாடி, கதவு போன்றவற்றை உடைத்து சேதம் விளைவித்தாக இ.தொ.காவினால் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் உடைக்கப்பட்ட குறித்த வாசிகசாலை ஒரு வருடத்தை கடந்தும் அதனை புனரமைப்பதற்கோ அல்லது திறப்பதற்கு இ.தொ.காவோ அல்லது கொட்டக்கலை பிரதேச சபையோ முன்வரவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வட்டக்கொடை பகுதி மக்கள் வாசிகசாலைக்கு செல்ல வேண்டுமென்றால் தலவாக்கலை நகரிக்கே செல்ல வேண்டியுள்ளதோடு , வாசிக சாலை அமைவது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று அந்த வா சிகசாலையின் நிலை கவலைக்கிடமாக காணப்படுகின்றது, எனவே அதனை புனரமைத்து தருமாறு மக்கள் இ.தொ.கா விடமும் கொட்டக்கலை பிரதேச சபையிடமும் வேண்டுகோள் விடுப்பதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

நீலமேகம் பிரசாத்

Related Articles

Back to top button
image download