செய்திகள்

வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா

 

மாண­வர்கள் மத்­தியில் வாசிப்பு திற­மையை மேம்படுத்தி எதிர்­வரும் வரு­டங்­களில் அவர்­களின் வாசிப்­புக்குதிறமைக்கேற்ப பதக்­கங்­களை வழங்­கு­வ­தற்கு கல்வி அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்­காக 809 தமிழ் மொழிப் பாட­சா­லை­க­ளுக்கு 218.7 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

கல்வி அமைச்சின் மூல­மாக மாண­வர்­களின் வாசிப்பு திற­மையை வி­ருத்தி செய் யும் நோக்­கத்­துடன் 3312 பாட­சா­லை­க­ளுக்கு 700 மில்­லியன் ரூபாய் நிதி நேற்று அலரி மாளி­கையில் வைத்து வழங்கி வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம், கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்­டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன்

கல்வி அமைச்சு மாண­வர்­களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்னெடுத்து வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மா­கவே இன்று வாசி­க­சா­லை­க­ளுக்கு புத்­த­கங்­களை பெற்றுக்கொள்­வ­தற்­கான நிதி வழங்­கப்­ப­டு­கின்­றது.

அதன்­படி மேல் மாகா­ணத்தில் 61 பாட­சா­லை­க­ளுக்கும்(17.8 மில்­லியன்) மத்­திய மாகா­ணத்தில் 141 பாட­சா­லை­க­ளுக்கும் (34.6 மில்­லியன்) தென் மாகா­ணத்தில் 11 பாட­சா­லை­க­ளுக்கும் (0.3 மில்­லியன்) வட மாகா­ணத்தில் 199 பாட­சா­லை­க­ளுக்கும் (51.8 மில்­லியன்) கிழக்கு மாகா­ணத்தில் 221 பாட­சா­லை­க­ளுக்கும் (62.5 மில்­லியன்) வடமேல் மாகா­ணத்தில் 62 பாட­சா­லை­க­ளுக்கும் (18.9 மில்­லியன்) வட­மத்­திய மாகா­ணத்தில் 24 பாட­சா­லை­க­ளுக்கும் (8.3 மில்­லியன்) ஊவா மாகா­ணத்தில் 49 பாட­சா­லை­க­ளுக்கும் (13.6 மில்­லியன்) சப்­ர­க­முவ மாகா­ணத்தில் 41 பாட­சா­லை­க­ளுக்கும் (10.9 மில்­லியன்) ரூபா­வு­மாக மொத்­த­மாக 809 தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு 218.7 மில்­லியன் ரூபாய் வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிதியை பாட­சா­லைகள் சரியான முறையில் பயன்­ப­டுத்தி அதன் உச்ச பல னை மாண­வர்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

வாசிப்­ப­தனால் மாத்­தி­ரமே மாண­வர்கள் பல புதிய விட­யங்­களை தெரிந்து கொள்ள முடியும். புதிய விட­யங்­களை தெரிந்து கொள்­ளாமல் மாண­வர்கள் கல்­வி­யிலும் முன்­னேற முடி­யாது.

பிரசித்தி பெற்ற தலை­வர்­க­ளையும் அவர்க­ளுடைய வாழ்க்கை வரலாறையும் நாங்கள் தேடிப்பார்ப்போமேயானால் அவர்கள் அனை வரும் வாசிப்பில் அதிக அக்கறை செலுத்தி இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே இந்த மாணவர்கள் வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதன் மூலம் இந்த நாட்டில் சிறந்த பிரஜைகளாக உருவாக முடியும் என இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button