செய்திகள்

வாடகைக்கு பெற்ற வாகனங்கள் விற்பனை -ஒருவர் கைது ..

வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்திடமிருந்து வாகனங்களை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பகுதியில் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றிடம் இருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றை போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக 44 மோசடி முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தமிழ் தெரண

Related Articles

Back to top button
image download