காலநிலைசெய்திகள்

வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதுடன், பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிக்கையொன்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்கள் ஏற்படும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய திறந்தவௌி மற்றும் மரங்களுக்கு கீழ் நிக்காமல், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களையும், சைக்கிள், உழுவு இயந்திரம் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும்  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதற்கும், மின்கம்பிகள் உடைந்து விழக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவால், அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button