செய்திகள்

வானில் ஓர் அற்புதம் ‘சூப்பர்மூன்’ ; இன்னும் சற்று நேரத்தில் கண்டுக்களிக்கலாம்.!

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் இன்று பவுர்ணமி நாளில் நிகழவுள்ளது. பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம். ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அதுவே பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு நிலவாக (பவுர்ணமி) இருப்பின், ‘சூப்பர்மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்து ரத்தச்சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும்.

இந்தியாவில் இந்தமுழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். அதுவும், அனைத்து பகுதிகளிலும் காணமுடியாது. இன்று , மதியம், 2:17 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 7:19 மணிக்கு முடிவடையும் இந்த இந்நிகழ்வு, மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும். தொலைநோக்கி, பைனாகுலர் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் இரவு முழுவதும் காண முடியும்.

இலங்கையில் இன்று மாலை 6.23க்கு தென்கிழக்கு வான்பரப்பில் தோன்றும் சந்திர கிரகணத்தை இரவு 7.19 வரை இலங்கையில் பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பிரிவின் வானிலை மற்றும் வளிமண்டலவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் பின்னர் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது முழுமையான சந்திர கிரகணமாக காட்சியளிக்கும்.

This image has an empty alt attribute; its file name is blood-moon.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com